தமிழக செய்திகள்

அ.நெடுங்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை

அ.நெடுங்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

இளையான்குடி

இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் அ.நெடுங்குளம் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பொதுமக்களும், ஊராட்சி தலைவியும் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாக்கடை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி கழிவுநீரும், மழை

நீரும் சேர்ந்து தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என ஊராட்சி தலைவரும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து