தமிழக செய்திகள்

ஜெயங்கொண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

பாதுகாப்பு கேட்டு ஜெயங்கொண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலுவைச்சேரி கிராமம் காலனி தெருவைச்சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் வீரச்செல்வன் (வயது 24). இவர் ஆண்டிமடத்தில் ஆட்டோ ஸ்பேர்பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகளும், நர்சிங் முதலாம் ஆண்டு மாணவியுமான சவுந்தர்யாவை (19) கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சவுந்தர்யாவை சேத்தியாதோப்பு தீப்பாஞ்சம்மன் கோவிலில் வீரச்செல்வன் நேற்று திருமணம் செய்து கொண்டார். பின்னர் காதல் ஜோடி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுமதி இருதரப்பு பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, பெண்ணின் தாயார் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது போலீசார் அறிவுரை கூறி காதல் ஜோடியை சவுந்தர்யாவின் தாயார் மற்றும் வீரசெல்வனின் நண்பர்களுடன் அனுப்பி வைத்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்