தமிழக செய்திகள்

பள்ளி மாணவியை பஸ் ஏறவிடாமல் தடுத்து கொலை மிரட்டல்

ராமநத்தம் பஸ் நிறுத்தத்தில் பள்ளி மாணவியை பஸ் ஏற விடாமல் தடுத்து மிரட்டிய 2 வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

ராமநத்தம்

பிளஸ்-2 மாணவி

வேப்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மாணவி ராமநத்தம் அருகே தொழுதூர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறா. மாணவி தினமும் வீட்டில் இருந்து பஸ்சில் பள்ளிக்கு வந்து செல்வார். அப்போது ராமநத்தம் பழைய சாலையை சேர்ந்த குணா மகன் விஜய்(வயது 24) என்பவர் கடந்த ஒரு மாதமாக மாணவியை பின் தொடர்ந்து செல்வதும், கிண்டல் செய்வதுமாக இருந்துள்ளார்.

இதுபற்றி மாணவி அவரது தாயிடம் கூறினா. பின்னர் மாணவியின் தாய் விஜயை எச்சரித்ததாக தெரிகிறது.

கொலை மிரட்டல்

இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் வகுப்பு முடிந்த பின்னர் பஸ் ஏறுவதற்காக ராமநத்தம் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பஸ்சில் மாணவி ஏற முயன்றபோது அவரை விஜய் மற்றும் இவரது நண்பர் ராமநத்தம் பழையசாலை ராஜ்குமார் மகன் பிரவின்குமார்(22) ஆகிய இருவரும் தடுத்து தகராறு செய்து ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

கைது

இதுகுறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் விஜய், பிரவின் குமார் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் ராமநத்தம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து