தமிழக செய்திகள்

வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது

நெல்லையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை கிழக்குத்தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பாஸ்கர் (வயது 24). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் பாஸ்கரை அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடையார்பட்டியை சேர்ந்த மாரிசெல்வம், நாகராஜன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். 

SCROLL FOR NEXT