தமிழக செய்திகள்

ஓவியர்கள்-பெயிண்டர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும்

ஓவியர்கள்-பெயிண்டர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும்

தினத்தந்தி

ஓவியர்கள்-பெயிண்டர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஓவிய சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தமிழ்வாணன், கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய்தி தொடர்பாளர் கமல் வரவேற்றார். இதில் மாவட்ட செயலாளர் சாமி.சங்கர், மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின், மாவட்ட பொருளாளர் ஜெயசீலன், மாவட்ட ஆலோசகர் முரளி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தனி நலவாரியம்

கூட்டத்தில், ஓவியர்கள் மற்றும் பெயிண்டர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். பிளாஸ்டிக் தடை செய்யும் அரசு ஓவியர்களுக்கு விளம்பரம் செய்ய பணி வழங்க வேண்டும். ஓவியர்களுக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஓவியப் பணிகள் வழங்க வேண்டும். ஓவியர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். நலிவடைந்த ஓவியர்களுக்கு அரசு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் முடிவில் ரமேஷ் நன்றி கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்