தமிழக செய்திகள்

தொடர் விடுமுறை எதிரொலி... அருவி போல் நிரம்பி வழியும் மக்கள் - களைகட்டும் ஒகேனக்கல்

தொடர் விடுமுறை என்பதால் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

தர்மபுரி,

அரையாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ் விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கலில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக களையிலிருந்து காணப்பட்ட ஒகேனக்கலில் தற்போது தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர்.

பரிசல் பயணம் செய்யவும் நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் பயணம் மேற்கொள்ள ஒரு நபருக்கு சுமார் ரூ.2,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கட்டணத்தை பொருட்படுத்தாமல் மக்கள் பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால் எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் ஒகேனக்கல்லில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்