தமிழக செய்திகள்

கீழவெண்மணி தியாகிகளுக்கு மவுன அஞ்சலி

கீழவெண்மணி தியாகிகளுக்கு மவுன அஞ்சலி அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

நாகை மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூரை அடுத்த கீழவெண்மணி கிராமத்தில் கடந்த 1968-ம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதி பண்ணைகளில் வேலை பார்த்த தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராடியபோது, ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக 44 பேர் ஒரே குடிசையில் வைத்து உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர். அந்த போராளிகளின் 54-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அந்த போராட்ட தியாகிகளுக்கு பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில், அக்கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்