தமிழக செய்திகள்

விவசாயி வீட்டுக்குள் புகுந்த பாம்பு

வேடசந்தூர் அருகே விவசாயி வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது.

தினத்தந்தி

வேடசந்தூர் அருகே உள்ள தம்மனம்பட்டியை சேர்ந்தவர் ராமன் (வயது 50). விவசாயி. இவர் குடும்பத்துடன் புளியமரத்துகோட்டை செல்லும் ரோட்டில் தோட்ட வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவருடைய வீட்டின் பின்புற தோட்ட பகுதியில் பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த ராமன் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் காடுத்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையில் படைவீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் சுமார் அரை மணி நேரம் போராடி 7 அடி நீளம் உள்ள சாரை பாம்பை பிடித்தனர். பின்பு அந்த பாம்பை வேடசந்தூர் அருகே உள்ள வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.

இதேபோல் குஜிலியம்பாறை பஸ்நிலையம் அருகே கடைவீதியில் நின்று கொண்டிருந்த மொபட்டில் பாம்பு ஒன்று இருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து பாம்பை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த பாம்பு அவர்களிடம் இருந்து தப்பி, அதே பகுதியில் உள்ள ஒரு மருந்து கடைக்குள் புகுந்தது. சிறிது நேரம் போராடி மருந்து கடைக்குள் பதுங்கிய 4 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு படைவீரர்கள் பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதியில் கொண்டு பாய் விட்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை