வத்தலக்குண்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவர் தனியார் நிறுவன ஊழியர். நேற்று மதிய நேரத்தில் இவருடைய வீட்டு கழிப்பறை அருகே ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதை கணேஷ்குமார் பார்த்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்துக்கு அவர் தகவல் கொடுத்தார்.
நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் அந்த பாம்பு வீட்டுக்குள் புகுந்துவிட்டது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் வீட்டுக்குள் பதுங்கியிருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பிடிபட்டது 5 அடி நீள சாரைப்பாம்பு ஆகும். அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்துவிடுவோம் என்றனர்.