ராமேஸ்வரம்:
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த சுதந்திர தின விழாவை மிகச் சிறப்பாக கொண்டாட அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இதனிடையே75-வது சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக ராமேசுவரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுடலை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் இன்று இரண்டு கைகளில் தேசிய கொடியுடன் சுமார் 75 நிமிடம் கடலில் மிதந்தபடி யோகா செய்து அசத்தினார்.
தேசியக்கொடியுடன் கடலில் மிதந்து யோகா செய்த சமூக ஆர்வலரை அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பக்தர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் நின்று வேடிக்கை பார்த்தனர்.