தமிழக செய்திகள்

பிறந்த குழந்தையை குளத்தில் வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய்

சிதம்பரத்தில் பிறந்த குழந்தையை குளத்தில் வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய்

சிதம்பரம்

சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் அருகே உள்ள குளக்கரையோரம் நேற்று காலை பிறந்து சில நாட்களான ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று பிணமாக மிதந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சிதம்பர நகர போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த குழந்தை கள்ளக்காதலில் பிறந்த குழந்தையா? அல்லது பெண் குழந்தை என்பதால் அதன் தாய் குழந்தையை குளத்தில் வீசி கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி அதன் தாயை வலைவீசி தேடி வருகிறார்கள்.