தமிழக செய்திகள்

பெண்களை சாட்டையால் அடிக்கும் வினோத வழிபாடு

கீழக்காவனூர் காமாட்சி அம்மன் கோவிலில் தோஷம் போக்க பெண்களை சாட்டையால் அடிக்கும் வினோத வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நேர்த்திக்கடன்

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே கீழக்காவனூர் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவராத்திரியையொட்டி திருவிழா நடைபெறும். அதன்படி 3-வது நாளாக சாட்டையடி வழிபாடு நடைபெற்றது. விழாவிற்கு ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மாவட்டத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், காவடி, அலகு குத்தி கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பெண்களை சாட்டையால் அடித்த பூசாரி

இதைத்தொடர்ந்து கோவில் பூசாரி சாட்டையுடன் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். பின்னர் பெண்களை பூசாரி சாட்டையால் அடிக்கும் வினோத வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்களை பூசாரி சாட்டையால் அடித்து தோஷத்தை போக்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்