தமிழக செய்திகள்

5 பேர் சென்ற காரில் திடீர் தீ

விருத்தாசலம் அருகே 5 பேர் சென்ற காரில் திடீரென தீப்பிடித்தது.

தினத்தந்தி

கம்மாபுரம்,

கம்மாபுரம் அருகே உள்ள கீழ்வளையமாதேவியை சேர்ந்தவர் ராஜ்மோகன்(வயது 38). இவர், தனது குடும்பத்தினர் 4 பேருடன் காரில் கீழ்வளையமாதேவியில் இருந்து விருத்தாசலம் நோக்கி நேற்று புறப்பட்டார். கோ.ஆதனூரில் வந்தபோது காரில் உள்ள ஏ.சி.யை ராஜ்மோகன் ஆன் செய்துள்ளார். அப்போது திடீரென கா என்ஜினில் இருந்து தீப்பொறி ஏற்பட்டு, கரும்புகை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜ்மோகன், சாலையோரத்தில் காரை நிறுத்தினார். பின்னர் அதில் இருந்தவர்கள் காரில் இருந்து கீழே இறங்கி ஓடிவிட்டனர். அடுத்த சில நொடிகளில் கார், தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ கார் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அந்த கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்து எலும்பு கூடுபோல் காட்சி அளித்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் கம்மாபுரம் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். 

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்