தமிழக செய்திகள்

அச்சரப்பாக்கம் அருகே எரிசாராயம் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

அச்சரப்பாக்கம் அருகே எரிசாராயம் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தினத்தந்தி

திருச்சி மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் இருந்து 5 டேங்கர் லாரிகளில் எரிசாராயம் ஏற்றப்பட்டு காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள மதுபான ஆலைக்கு வந்து கொண்டிருந்தது. அதில் ஒரு லாரி செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே தேன்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் டேங்கர் லாரியில் இருந்த எரிசாரயம் கீழே கொட்டி ஆறு போல் ஓடியது. இது சம்பந்தமாக தகவல் கிடைத்தவுடன் அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் பாதுகாப்பு பணியை செய்தனர்.

போலீசார் கிரேன் மூலம் டேங்கர் லாரியை மீட்டு மதுபான ஆலைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து மாற்றுபாதையில் திருப்பி விடப்பட்டது.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்