தமிழக செய்திகள்

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

திருவள்ளூர் வள்ளுவர்புரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 24). இவர் ஈக்காடு பகுதியில் உள்ள எரிமேடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுபத்ரா (20). கடந்த 29-ந் தேதி கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மனைவியிடம் கோபித்துக் கொண்டு வெளியே சென்ற மனோஜ் பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மனோஜ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது