தமிழக செய்திகள்

கூடுவாஞ்சேரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கூடுவாஞ்சேரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

வாலிபர்

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கன்னிவாக்கம் சாந்தாதேவி நகர் பகுதியை சேர்ந்தவர் நிர்மல் (வயது 21). இவர் காயரம்பேடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவர் தனது தாயாருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இவரது தாயார் கோவிலுக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்து கதவை தட்டி மகனை கூப்பிட்ட போது வீட்டிற்குள் இருந்த மகன் நீண்ட நேரம் ஆகியும் கதவைத் திறக்காததால் சந்தேகம் அடைந்தார்.

தற்கொலை

உடனே அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவலை தெரிவித்தார். அக்கம்பக்கத்தினர் ஜன்னல் கதவை உடைத்து பார்த்தபோது நிர்மல் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் பிணமாக தொங்கிய நிர்மலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது