தமிழக செய்திகள்

ஆவடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் சாவு

ஆவடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியில் வசித்து வந்தவர் மனோஜ்குமார் (வயது 31). இவர் மத்திய உளவுத்துறையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி வைஷாலி (26). இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார்.

நேற்று முன்தினம் மாலை மதுரவாயலில் நண்பர் வீட்டு சீமந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனோஜ்குமார், பின்னர் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்தார். ஆவடி பருத்திப்பட்டு சாலையில் வரும்போது ஆவடியில் இருந்து திருவேற்காடு நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மனோஜ்குமார் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த மனோஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு