தமிழக செய்திகள்

தரையில் படுத்து இருந்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

தரையில் படுத்து இருந்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் முருகன் (வயது 19). பொக்லைன் எந்திரம் டிரைவரான இவர். நேற்று முன்தினம் காலையில் தனது ஊரில் இருந்து சென்னையை அடுத்த அம்பத்தூர் கருக்கு மெயின் சாலையில் உள்ள தனியார் இரும்பு கம்பெனிக்கு வேலைக்கு வந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் பணியில் இருந்த முருகன், சற்று நேரம் ஓய்வெடுப்பதற்காக அங்கே நிறுத்தி இருந்த லாரியின் பின்புறத்தில் படுத்து தூங்கியதாக தெரிகிறது.

இந்தநிலையில் முருகன் படுத்து இருப்பது தெரியாமல் லாரியை அதன் டிரைவர் ராஜீவ் காந்தி பின்னோக்கி நகர்த்தினார். அப்போது தரையில் படுத்து இருந்த முருகன் மீது லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய முருகன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் ராஜீவ்காந்தி என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்