தமிழக செய்திகள்

வாலிபர் பலி

திண்டுக்கல்-தேனி நெடுஞ்சாலையில் ஆத்தூர் பிரிவு பகுதியில் லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

ஆத்தூர் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35) அதே ஊரை சேர்ந்தவர் பிரபாகரன் (29). நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு செம்பட்டி அருகே உள்ள ஆதிலட்சுமிபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆத்தூருக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ரமேஷ் ஓட்டினார். பிரபாகரன் பின்னால் அமர்ந்து வந்தார். திண்டுக்கல்-தேனி நெடுஞ்சாலையில் ஆத்தூர் பிரிவு பகுதியில் அவர்கள் வந்தபோது, போடியில் இருந்து கோவை நோக்கி சென்ற மினி லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். பிரபாகரன் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த செம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிருக்கு போராடிய பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து லாரி டிரைவரான போடியை சேர்ந்த முத்துராஜ் (35) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...