தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மினிவேன் மோதி வாலிபர் பலி

மணவாளநகர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதி வாலிபர் பலியானார்.

மணவாளநகர் அடுத்த வெங்கத்தூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (வயது 33) இவரது அண்ணன் நரசிம்மன் (38) மற்றும் திருத்தணி அடுத்த ஆர்.கே. பேட்டை சுந்தராஜபுரம் பகுதி சேர்ந்தவர் ராஜேந்திரன் (37) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வெங்கத்தூர் கிராமத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை வெங்கடாஜலபதி ஓட்டினார். அப்போது எதிரே வேகமாக வந்த மினி வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 3 மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டது படுகாயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் வெங்கடாஜலபதி இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். ராஜேந்திரன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். நரசிம்மன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராகுல் மாஜி (22), நிராகர் மங்கராஜ் (30). இவர்கள் இருவரும் திருவள்ளூர் அடுத்த எடப்பாளையம் பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகின்றனர். கடந்த 15-ந் தேதி இரவு ராகுல் மாஜி நீண்ட நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் இருவரும் படுக்க சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நிராகர் மங்கராஜ் எழுந்து பார்த்தபோது, வீட்டின் கூரையிலிருந்த இரும்பு பைப்பில் வேட்டியால் ராகுல் மாஜி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்து திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த ராகுல் மாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ராகுல்மாஜி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்