தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே நீரில் மூழ்கி வாலிபர் பலி

கள்ளக்குறிச்சி அருகே நீரில் மூழ்கி வாலிபர் உயிழந்தா.

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி அருகே ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரி மகன் திருமால் (வயது 18). இவர் நேற்று முன்தினம் இரவு அணைக்கரைகோட்டலம் பகுதியில் உள்ள மணிமுக்தா அணையில் குளிக்க சென்றார். அப்போது அவர் அணையில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். இதைபார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக விரைந்து வந்து திருமாலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் எந்தவொரு தகவலும் தெரியவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருமாலை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் திருமால் பிணமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கள்ளக்குறிச்சி போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது