தமிழக செய்திகள்

வீட்டில் பிணமாக கிடந்த வாலிபர்

வீட்டில் வாலிபர் பிணமாக கிடந்தார்.

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் பரக்கத் நிஷா. இவரது வீட்டில் நாகராஜனின் மகன் பாண்டியன்(வயது 32) என்பவர் வாடகைக்கு வசித்து வந்தார். பாண்டியனுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாண்டியன் மட்டும் தனியாக வசித்து வந்தார். மேலும் பாண்டியன் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை பாண்டியன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, பாண்டியன் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர்கள் இது குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பறிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை