தமிழக செய்திகள்

காட்டுமன்னார்கோவில் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

காட்டுமன்னார்கோவில் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் வடக்கு கொளக்குடி வார சந்தை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் காட்டுமன்னார்கோவில் அருகே கருப்பேரி கிராமத்தில் உள்ள வாய்க்கால் தெருவை சேர்ந்த ஜான்சன் மைக்கேல் ராஜ்(வயது 21) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து ஜான்சன் மைக்கேல் ராஜை கைது செய்த போலீசார், அவாடமிருந்த 100 கிராம் கஞ்சா, ரூ.20 ஆயிரம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்