ராமநத்தம்,
வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நகர் கிராமத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் நகர் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மகன் மிஸ்டர் டீனுபையா (வயது 20) என்பதும், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து மிஸ்டர் டீனுபையாவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.