தமிழக செய்திகள்

திருத்தணி ரெயில் நிலையம் அருகே கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது

திருத்தணி ரெயில் நிலையம் அருகே கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினத்தந்தி

ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக சென்னைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் திருத்தணி ரெயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகப்படும்படி ரெயில் நிலையத்தை நோக்கி வந்த வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர் கையில் வைத்திருந்த பையில் 10 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கஞ்சாவை கடத்தி வந்தவர் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சிங்கமுகம் (வயது 24) என்பதும் இவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை பஸ் வழியாக கடத்தி வந்து பின்னர் ரெயில் வழியாக சென்னைக்கு செல்ல முயன்றபோது போலீசிடம் சிக்கியது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா கடத்திய சிங்கமுகத்தை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்