தமிழக செய்திகள்

ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்.

புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரபாண்டியன் (வயது 27). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அருகே பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் காரைக்குடி ரெயில்வே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ரெயிலில் அடிபட்டு பலியானது தெரியவந்தது. இதுகுறித்து காரைக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT