தமிழக செய்திகள்

லாரி மோதி வாலிபர் பலி

திருக்கோவிலூர் அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே நரிப்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 27). இவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் அதே ஊரில் உள்ள மெயின் ரோட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று சேட்டு மீது மோதியது. இந்த விபத்தில் சேட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன் மற்றும் அந்தோணி குரூஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சேட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு