தமிழக செய்திகள்

சேலம் புதிய பஸ்நிலையத்தில் வாலிபரிடம் வழிப்பறி

சேலம் புதிய பஸ் நிலையத்தில் வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 38). இவர், தனது நண்பர்களுடன் புதிய பஸ் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த 2 பேர் திடீரென ராமச்சந்திரனை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை வழிப்பறி செய்தனர். அவர்கள் அங்கிருந்து தப்பி செல்லமுயன்றபோது, ராமச்சந்திரன், அவருடைய நண்பர்கள் 2 பேரையும் துரத்தி பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மணியனூரை சேர்ந்த 17 வயது சிறுவனும், தாதகாப்பட்டியை சேர்ந்த மற்றொரு சிறுவனும் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து