தமிழக செய்திகள்

மொபட்டில் மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது

மொபட்டில் மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்சியம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மீன்சுருட்டி அருகே உள்ள இடைக்கட்டு காலனி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தேவா(வயது 25) என்பவரை வீரசோழபுரம் காமராஜர் நகர் அருகே பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவர் ஓட்டி வந்த மொபட்டை சோதனை செய்தனர். அப்போது, அவர் வீரசோழபுரம் டாஸ்மாக் கடையில் இருந்து 16 குவார்ட்டர் பாட்டில்களை வாங்கி, விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 16 குவார்ட்டர் பாட்டில்கள், மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, தேவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து