சென்னை நுங்கம்பாக்கம், செனாய் நகரை சேர்ந்தவர் மேகநாதன். இவருடைய மகன் ராஜேஷ் குமார் (வயது 22). நேற்று காலை ராஜேஷ் குமார் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது, சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயில் ராஜேஷ் குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.