தமிழக செய்திகள்

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆயிரம் கலசம் நன்னீராட்டு விழா

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆயிரம் கலசம் நன்னீராட்டு விழா

திருவாரூரில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேரோட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள், வீதியுலா நடந்து வருகிறது. நேற்று ஆயிரம் கலச நன்னீராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் பக்தர்கள், கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) தியாகராஜர் வசந்த பெருவிழா மற்றும் எண் திசை கொடியேற்று திருவிழா நடக்கிறது.