தமிழக செய்திகள்

நிலக்கரி சாம்பல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

நொய்யல் பகுதியில் நிலக்கரி சாம்பல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர்-கிளீனர் உயிர் தப்பினர்.

தினத்தந்தி

லாரி கவிழ்ந்தது

நெய்வேலி மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து பழுப்பு நிலக்கரி சாம்பலை டிரைவர் லாரியில் ஏற்றிக்கொண்டு திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் செயல்பட்டு வரும் சிமெண்டு கல் தயாரிக்கும் நிறுவனத்திற்கு கரூர் மாவட்டம், நொய்யல் வழியாக நேற்று முன் தினம் இரவு வந்து கொண்டிருந்தார்.

அப்போது நொய்யல் பகுதியில் தார் சாலை ஓரத்தில் குழி தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டு இருந்தது. இரவு நேரத்தில் சாலை நெடுகிலும் குழி தோண்டப்பட்டு இருப்பது தெரியாமல் எதிரேவந்த வாகனத்திற்கு வழி விடும் வகையில் சாலை ஓரத்தில் லாரியை ஓட்டிய போது நிலை தடுமாறி நிலக்கரி சாம்பலுடன் லாரி சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.

டிரைவர்-கிளீனர் உயிர் தப்பினர்

அப்போது முன்பக்கத்தில் இருந்த 2 டயர்களும் முறிந்து கீழே விழுந்தது. லாரி டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். அதேபோல் அந்த நேரம் சாலையில் மற்ற எந்த வாகனங்களும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

உடனடியாக ஆட்களை வரவழைத்து குப்புறக்கவிந்த லாரியில் இருந்த சாம்பலை மற்றொரு லாரியில் ஏற்றினார்கள். பின்னர் விழுந்து கிடந்த லாரியை மீட்பதற்கான முயற்சியை எடுத்துக் கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது