தமிழக செய்திகள்

திருப்போரூர் அருகே தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்து

திருப்போரூர் அருகே தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், பழைய மாமல்லபுரம் சாலை வழியாக முக்கிய பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று அதிகாலை பழைய மாமல்லபுரம் சாலையில் மாமல்லபுரத்தில் இருந்து திருப்போரூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் எந்தவித காயமும் இன்றி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும் தடுப்புச்சுவரில் அமைக்கப்பட்டிருந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பம், கண்காணிப்பு கேமரா என ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்