தமிழக செய்திகள்

ஜல்லி ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து

பாணாவரம் அருகே ஜல்லி ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானளது,

தினத்தந்தி

காவேரிப்பாக்கம்

பாணாவரம் அருகே ஜல்லி ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானளது,

பாணாவரத்தை அடுத்த மகேந்திரவாடி பகுதியில் கடந்த 6 மாதங்களாக சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து சிமெண்டு, ஜல்லி, கம்பிகள் ஆகியவை லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வாலாஜா பகுதியிலிருந்து லாரி ஒன்று ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. மகேந்திரவாடி பகுதியில் உள்ள மதகு காத்த அம்மன் கோவில் அருகே வந்த டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நல்லவேளையாக டிரைவர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பாணாவரம் போலீசார் விரைந்து வந்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்