தமிழக செய்திகள்

வீட்டின் எதிரே நிறுத்தி இருந்த வேன் தீப்பிடித்து எரிந்தது

ஆவடியில் வீட்டின் எதிரே நிறுத்தி இருந்த வேன் தீப்பிடித்து எரிந்தது.

தினத்தந்தி

ஆவடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோதண்டம் (வயது 38). சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு சொந்தமான டெம்போ வேன், நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் வீட்டுக்கு எதிரே நிறுத்தி வைத்திருந்தார்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென அந்த வேன் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோதண்டம், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் ஒரு மணிநேரம் போராடி வேனில் கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் வேன் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை