தமிழக செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்த சாலை பணியாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினத்தந்தி

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் ஆற்காட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெ.வெங்கடேசன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் ஜெ.நந்தகுமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சிவசங்கரன் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் கா.பெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக கோட்ட பொறியாளரிடம் நேரடியாகவும், கடிதங்கள் மூலமாகவும் தகுதி உள்ள சாலை பணியாளர்களுக்கு சாலை ஆய்வாளர் நிலை -2 பதவி உயர்வு வழங்கிட வேண்டும், ஆற்காடு, வாலாஜா, அரக்கோணம் அலுவலகங்களில் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடம், அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிறப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முடிவில் ஆற்காடு உட்கோட்ட பொருளாளர் எம்.சரவணன் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் ஆற்காடு, வாலாஜாபேட்டை, அரக்கோணம், நெமிலி ஆகிய உட்கோட்ட நிர்வாகிள் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து