தமிழக செய்திகள்

ஆழமான பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்

நன்னிலம் அருகே கங்களாஞ்சேரி வெட்டாற்றில் ஆழமான பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா.

தினத்தந்தி

நன்னிலம்;

நன்னிலம் அருகே கங்களாஞ்சேரி வெட்டாற்றில் ஆழமான பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா.

வெட்டாறு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கங்களாஞ்சேரி வெட்டாற்றின் சட்ரஸ் அருகே தண்ணீர் ஓடும் பகுதியில் 20 அடி ஆழ பள்ளம் உள்ளது. அந்த பகுதியில் தினமும் ஏராளமான மக்கள் குளித்து வருகிறார்கள். இந்த பகுதியில் ஆழம் அதிகமாக உள்ளதால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இந்த பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

எச்சரிக்கை பலகை

எனவே நன்னிலம் அருகே கங்களாஞ்சேரி வெட்டாற்றின் சட்ரஸ் அருகே தண்ணீர் ஓடும் பகுதியில், இந்த பகுதி ஆழமான பகுதி. இங்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு