தமிழக செய்திகள்

ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானை

ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானை

தாளவாடி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதி வழியாக திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நிலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது. பின்னர் அந்த யானை, அங்கு நின்று கொண்டு கரும்பு லாரி வருகிறதா? என சாலைய வழிமறித்தபடி நின்று கொண்டிருந்தது.

யானையை கண்டதும் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை சிறிது தூரத்திலேயே நிறுத்தி விட்டனர். இதனால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 15 நிமிடத்துக்கு பின்னர் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றனர். சாலையை வழிமறித்த யானையால் திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் 15 நிமிட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை