தமிழக செய்திகள்

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

ஆலங்காயத்தில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

ஆலங்காயம்- காவலூர் செல்லும் சாலையில் உள்ள பிரகாஷ் உடையார் என்பவர் கிணற்றில் அடையாளம் தெரியாத பெண் பிணம் ஒன்று மிதப்பதாக போலீஸ் நிலையத்திற்கும், ஆலங்காயம் தீயணைப்பு நிலையத்திற்கும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்,

அதன்பேரில் ஆலங்காயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரி கலைமணி தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் மிதந்த பிணத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்தாய் (வயது 52) என்பதும், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. மேலும் எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார்? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.