தமிழக செய்திகள்

வடபழனியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 31 பவுன் நகை திருடிய பெண் கைது

வடபழனியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 31 பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

கே.கே.நகர், 15-வது செக்டார் பகுதியை சேர்ந்தவர் அலோசியஸ் ஜோசப் (வயது 44). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் இருந்த ஆரம், நெக்லஸ் உள்ளிட்ட 31 பவுன் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வீட்டின் பூட்டு உடைக்காமலும் பீரோ கதவுகள் உடைக்கப்படாமலும் நகைகள் திருடு போனதால் வீட்டில் பணிபுரியும் வேலைக்கார பெண் சுமத்ரா (38), மீது சந்தேகம் இருப்பதாக வீட்டின் உரிமையாளர் போலீசில் தெரிவித்தார். அதன் பேரில், வீட்டில் பணிபுரியும் சுமத்ராவிடம் வடபழனி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் அறைக்குள் சென்று பீரோவில் இருந்த நகைகளை திருடி சென்று விற்பனை செய்ததும், மேலும் பீரோவில் அதிக அளவில் நகைகள் இருந்ததால் நகைகளை எடுத்தால் உரிமையாளர் கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்து சிறுக, சிறுக நகைகளை திருடி சென்று விற்பனை செய்ததையும் சுமத்ரா ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடம் இருந்து 20 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்