தமிழக செய்திகள்

சீட் பெல்ட் அணியாமல் வந்த வாலிபரை போலீசார் தாக்கியதால் தீக்குளித்தார்

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் சீட் பெல்ட் அணியாமல் காரில் வந்த இளைஞரை போலீஸ் தாக்கியதால் அந்த இளைஞர் தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார். #Tharamani | #SelfImmolation

தினத்தந்தி

சென்னை

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள சொகுசு ஓட்டல் பகுதியில் இன்று போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது அங்கு காரில் வந்த இளைஞர் ஒருவர் சீட் பெல்ட் அணியாமல் வந்துள்ளார். அவரை பிடித்து வலுக்கட்டாயமாக போலீசார் கீழே இறக்கிவிட்டு விசாரணை செய்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபருக்கும் போலீசாருக்குமிடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியிலேயே வாலிபரை தாக்கியுள்ளனர். இதில் விரக்தியடைந்த அந்த வாலிபர் காரில் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார்.

இதைப்பார்த்த பொதுமக்கள் தீக்காயங்களுடன் துடித்த வாலிபரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் போலீசாரின் இந்த அராஜக போக்கை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது