சென்னை,
திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் ஏரிக்கரையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெண் ஒரு வர், உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். திருவேற்காடு போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர் கோயம்பேடு பகுதி யைச் சேர்ந்த ராதா (வயது 50) என்பது தெரியவந்தது. இவருக்கும். அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுரேஷ் (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் கள்ளக்காதலாக மாறியதாக தெரிகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு ராதாவும், சுரேசும் அயனம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். இருவருக்கும் போதை தலைக்கேறியபோது சுரேசின் மனைவி குறித்து ராதா தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த சுரேஷ், கள்ளக்காதலி ராதாவின் தலையை ஏரிக் கரை சுற்றுச்சுவரில் மோதியதுடன், கையில் இருந்த பீர் பாட்டிலால் அவரது மண்டையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்த ராதா, ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதனால் பயந்துபோன சுரேஷ். அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து திரு வேற்காடு போலீசார் நேற்று சுரேசை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.