தமிழக செய்திகள்

காதல் திருமணம் செய்த ஒரே ஆண்டில் குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

காதல் திருமணம் செய்த ஒரே ஆண்டில் குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

சென்னை அடுத்த புழல் திருநீலகண்டர் 3-வது தெருவை சேர்ந்தவர் அருண் மாடியா (வயது 27). இவர் புழலில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரும் பெனிட்டா பெஹாரி என்ற பெண்ணும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே, பெனிட்டா பெஹரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த புழல் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி 1 ஆண்டு ஆவதால் தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ. ரங்கராஜன் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்