தமிழக செய்திகள்

கொலைமுயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

எறையூர் கிராமத்தில் கொலைமுயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல் மகன் மெல்கியூர் என்கிற ஜான் மெல்கியூர்(வயது 29). இவர் முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை மகன் ஆல்பர்ட் என்பவரை கட்டையால் அடித்து கொல்ல முயன்றார். இந்த வழக்கில் மெல்கியூரை எலவனாசூர்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரது குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் மெல்கியூரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவின் பேரில் மெல்கியூரை குண்டர்சட்டத்தில் எலவனாசூர்கோட்டை போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகலை சிறையில் இருக்கும் அவரிடம் சிறை காவலர்கள் வழங்கினர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை