பழனி அருகே ஆண்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னம்மாபட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). விவசாயி. இவர் கடந்த 2-ந்தேதி இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டார். பின்னர் மறுநாள் காலை முருகன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததுடன் பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து பழனி தாலுகா போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மலும் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 27) என்பவர் முருகனின் வீட்டு கதவை உடைத்து, பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.