தமிழக செய்திகள்

வீட்டில் சிமெண்டு ஓடுகளை பிரித்தபோது 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த வாலிபர் பலி

வீட்டில் சிமெண்டு ஓடுகளை பிரித்தபோது 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

சென்னை தண்டையார்பேட்டை, அம்மணிஅம்மன் தோட்டத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 34). வெல்டிங் வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று காசிமேடு எஸ்.என்.செட்டி சாலையில் உள்ள ஒரு வீட்டில் சிமெண்டு ஓடுகளை பிரிக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 30 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சங்கர், பரிதாபமாக இறந்தார். இது குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT