தமிழக செய்திகள்

பெண்ணை காதலித்து, திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது

பெண்ணை காதலித்து, திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இருகையூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகானந்தம். இவரது மகன் அஜித்(வயது 24). இவர், 21 வயதுடைய ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று அவருடன் உல்லாசமாக இருந்ததாகவும், பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அந்த பெண் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.