தமிழக செய்திகள்

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு ஆதவ் அர்ஜுனா வாழ்த்து!

'எல்லோருக்கும் எல்லாம்' என்கிற மக்கள் அரசை நிலைநாட்டுவோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

சென்னை,

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் பெருமக்கள் ஸ்ரீநாத், எஸ். கமலி, சி. விஜயலக்ஷ்மி, ஆர்.வி. ரஞ்சித் குமார், வினோத், ராஜீவ் , பி. ராஜ்குமார், வி. காந்திராஜ், பி. மதன் ராஜா , கே. ஜெகதீஸ்வரி, எம். விஜய் பாலாஜி, டி. லோகேஷ் தமிழ்செல்வன், ஏ. விஜய் தமிழன் பார்த்திபன், ரமேஷ், ஆர். குமார், கே. தென்னரசு, வி. சம்பத் குமார், ஜெ. முகமது பர்வேஸ், டி. சரத்குமார், என். மரிய வில்சன், கே. விக்னேஷ் ஆகியோருக்கும்,

காங்கிரஸ் பேரியக்கம் சார்பாக அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ள எஸ். ராஜேஷ் குமார் மற்றும் பி. விஸ்வநாதன் ஆகியோர் அனைவருக்கும்,

என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 'மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள்' என்ற கோட்பாட்டில் உறுதிக்கொண்டு, சமத்துவ, சமூகநீதி சமூகம் என்ற லட்சியப் பயணத்தில் அர்ப்பணிப்புடன் பணி செய்வோம். 'எல்லோருக்கும் எல்லாம்' என்கிற மக்கள் அரசை நிலைநாட்டுவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.