தமிழக செய்திகள்

சிவன் கோவிலில் ஆடித்தபசு திருவிழா

சிவகாசி சிவன் கோவிலில் ஆடித்தபசு திருவிழா நாளை தொடங்குகிறது.

சிவகாசி, 

சிவகாசியில் உள்ள விஸ்வநாதசுவாமி (சிவன்) கோவிலில் ஆடித்தபசு திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 9-வது நாள் திருவிழாவாக வருகிற 8-ந் தேதி சட்டத்தேரோட்டம் நடக்கிறது. 10-ந்தேதி தெற்கு ரதவீதியில் விஸ்வநாதர் ரிஷபவாகனத்தில் விசாலாட்சி அம்பாளுக்கு தபசுக்காட்சி அளிக்கிறார். 11-ந்தேதி புஷ்பபல்லக்கில் அம்பாள் மற்றும் ரிஷப வாகனத்தில் சுவாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 14-ந்தேதி உற்சவசாந்தி நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...