கரூர் அமராவதி ஆறு வருடத்தின் பெரும்பாலான நாட்களில் நீரின்றி இருக்கிறது. பல வருடங்களாக அமராவதி ஆறு வற்றாத ஆறாக இருந்த நிலையில், அண்மைக்காலமாக காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.இருப்பினும் கடந்த சில வருடங்களாக ஆடி மாதத்தில் அமராவதி அணைக்கு பெருக்கெடுத்து வரும் நீரால், உபரி நீர் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்தநிலை தொடர வேண்டும் என்பதற்காக கரூர் அமராவதி ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பல்வேறு அமைப்புகள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு அமராவதி ஆற்றங்கரையில் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் அமராவதி ஆற்றுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைவரும் கற்பூர ஜோதியை ஏற்றி அமராவதி ஆற்றில் விட்டு அமராவதி ஆற்றை வணங்கினர். நிறைவாக பூஜை செய்த அனைத்து பொருட்களையும் அமராவதி ஆற்றில் கரைத்து வணங்கினர்.